பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்சட்டப்பேரவைத் தேர்தல் : பிப். 26-ல் சிபிஎம் உடன் திமுக பேச்சுவார்த்தை!ஆப்கனில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!
/

அகதிகள் முகாமில்   4வது நாளாக உண்ணாவிரதம்

செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை

News image
Updated On :2 ஜனவரி 2024, 8:03 pm

செங்கை பி. அமுதா

செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் 4 வது நாளாக புதன் கிழமை ஈழத்தமிழர்கள் தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கியூ பிரிவு போலீஸாரால் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்ட 4 நைஜீனியர்கள் உட்பட 41 ஈழத்தமிழர்களை  செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 இவர்கள் பல்வேறு காலகட்டத்தில் தங்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட போது கியூ பிரிவு போலீஸ் அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் 45 நாட்களுள் தங்களை விடுதலை செய்வதாக கூறிச்சென்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனையடுத்து மீண்டும் கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் 7 அகதிகள் தங்களை விடுதலை செய்யக்கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 4 வது நாள் புதன் கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் காந்திமோகன், ரமேஷ் ஆகிய  2 பேர் ஆதரவு தெரிவித்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 9 பேர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 அவர்களிடம் வட்டாட்சியர் இளங்கோ, டிஎஸ்பி மூவேந்தன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். உணணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேச்சுவார்த்தைக்கு உடன்படவில்லை. தங்களை விடுதலை செய்யும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வதாக கூறி தொடர் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.